நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி
கொட்டாம்பட்டி அருகே நடந்து சென்றவர் வாகனம் மோதி பலியானார்.;
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் திருச்சி-மதுரை நான்கு வழி சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளப்பட்டி (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வாகன விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.