பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கொடைரோடு அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ரெயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-10-08 16:43 GMT
திண்டுக்கல்: 


திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி தலைமையாசிரியர் மகாவிஷ்ணு முன்னிலை வகித்தார். ரெயில்வே தனிப்பிரிவு ஏட்டு மணிவண்ணன் வரவேற்றார்.


முகாமில் ரெயில்வே கேட், தண்டவாளத்தை கடந்து செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

மேலும் செய்திகள்