முதியவர்களிடம் நூதன மோசடி

முதியவர்களிடம் நூதன மோசடி

Update: 2021-10-13 13:19 GMT
தாராபுரம், அக்.14-
தாராபுரத்தில், ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நூதன முறையில் கைவரிசை காட்டிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நூதன மோசடி
தாராபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல் ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், ஏமாற்றியும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோன்ற மோசடி தொடர்பாக, தாராபுரம் போலீசார் ஏ.டி.எம்., களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான் வயது 34 என்பது தெரிய வந்தது. இவர் முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு, கார்டுகளை மாற்றி கொடுத்து சென்று, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்தது பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
கைது
இதையடுத்து  சோட்டே லால் பஸ்வானை தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வி கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். 
---

மேலும் செய்திகள்