ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகள் - ரூ.25 ஆயிரம் கொள்ளை

திருவாரூர் அருகே ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-13 16:43 GMT
திருவாரூர்:
திருவாரூர் அருகே ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
25 பவுன் நகைகள்-ரூ.25 ஆயிரம் கொள்ளை
திருவாரூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36). இவர் இ- சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (35). எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவரின் தந்தை இறந்து விட்ட தால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்திற்கு கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.. இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
மர்ம நர்பர்களுக்கு வலைவீச்சு
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்