வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு

வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2021-10-15 21:21 GMT
பெரம்பலூர்:

வழிபட அனுமதி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அரசு தடை விதித்திருந்தது. இதனால் வழிபாட்டு தலங்களில் அன்றைய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு காட்சியளித்தன. ஆனால் கோவில்களில் அன்றைய நாட்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அரசின் கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி வழிபட அனுமதித்து உத்தரவிட்டது.
கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று வழிபாட்டு தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. கோவில்களில் முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிபட்டு சென்றனர். நேற்று விஜயதசமி என்பதால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதே போல் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் அரசின் கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்