நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா

நகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-18 20:14 GMT
அரியலூர்:

சம்பளம் வழங்கவில்லை
அரியலூர் நகராட்சியில் 36 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 124 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் என மொத்தம் 160 பேர் தூய்மைப் பணியை செய்து வருகின்றனர். தினமும் காலை 5 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் இவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம், ஒவ்வொரு மாதமும் காலதாமதமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாத (செப்டம்பர்) சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் கிடைக்க நடவடிக்கை
இதையடுத்து அவர்களிடம், நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிரந்தர பணியாளர்கள் 36 பேருக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என்றும், ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரரிடம் பேசி விரைவில் அவர்களுக்கும் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். 
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்