மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-22 14:27 GMT
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.  பெய்தது. இதனால் பெரும்பாறை-சித்தரேவு இடையேயான மலைப்பாதையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக குப்பமாள்பட்டி-கே.சிபட்டி இடையேயான மலைப்பாதையில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், சாலை ஆய்வாளர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையிலான சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மலைப்பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

மேலும் செய்திகள்