தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-24 20:26 GMT
சுகாதார சீர்கேடு
மேலபுத்தேரி சுகாதார நிலையம் அருகில் மெயின் ரோட்டோரம் அரசினர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தேங்கிய குப்பைகள், கழிவுகளை சிலர் அகற்றி சாலையோரம் போட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -வெங்டேஷ், பாரத்நகர்.
பஸ் இயக்கப்படுமா?
நாகர்கோவிலில் இருந்து பெத்தேல்புரத்துக்கு தடம் எண் 12 எம் என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக தினமும் 6 முறை இயக்கப்பட்டு வந்த இந்த பஸ்சால் அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், முதியோர் என பலர் பயன்பெற்று வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- யு.வள்ளிகொண்ட பெருமாள், பூச்சிக்காடு.
பாதசாரிகள் அவதி
நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி செல்லும் அசம்பு சாலையில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி உள்ளது. இந்த சாலையில் ஓணக்கோவில் அருகில் சாலையோரம் உள்ள நடைபாதையில் பல இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சிலாபுகளை சிரமைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -சுரேஷ்குமார், வடசேரி.
விபத்து அபாயம்
கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டவிளை சந்திப்பு முதல் வெள்ளியாகுளம் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
            -டொமனிக் ததேயுஸ்,
 சிறாயன்விளை.
பராமரிப்பு இல்லாத கழிப்பறை
புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கல்மண்டபத்தின் அருகில் பொதுக்கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறையை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
                                    -கிருஷ்ணமணி, இலவுவிளை. 
சாலையை சீரமைக்க வேண்டும்
ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அங்கவிளை-சபரிகுளம்  சாலை பல மாதங்களாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் மின்விளக்குகளும் இல்லாததால் இரவு நேரம் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
   -வில்சன், ஆலங்கோடு.

மேலும் செய்திகள்