பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

Update: 2021-10-25 14:21 GMT
ஊட்டி,அக்.26-
ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியன் பூங்காவில் இயற்கையாக அமைந்து உள்ள பாறையில் நீர்வீழ்ச்சி போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மேல்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. தற்போது அந்த செடிகளில் குறிஞ்சி மலர்கள் நீல நிறத்தில் பூத்துக்குலுங்குகின்றன.

ஸ்ட்ரோபிலாந்தஸ் சோசிபினஸ் என்ற வகையை சேர்ந்த குறிஞ்சி செடிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையது. அதன்படி பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகிறது. 2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்ற மலர்களை கண்டு ரசிப்பது போல், குறிஞ்சி மலர்களையும் கண்டு ரசிக்கின்றனர். மேலும் இதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இது பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.

மேலும் செய்திகள்