பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணியை புறக்கணித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-25 19:35 GMT
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று பணியை புறக்கணித்து பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார் அவுட்சோரிங் மூலம் நிறைவேற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களை நேரடியாக பணியில் அமர்த்தி நிரந்தப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம், போனஸ் ஆகியவற்றை சட்டப்படி வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன் வழங்க வேண்டும். கடந்த வருடங்களில் செலுத்தப்படாத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, கலெக்டர் அறிவித்த ஊதிய நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். இ.எஸ்.ஐ. காப்பீட திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்