நெல் நடவு பணிகள் தீவிரம்

நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-11-05 20:56 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் போக தாளடி நெல் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதில் திருமானூர், தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வயல்களை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால மாற்றத்தினால் வயல்வெளியில் வயலை சமன் செய்வது, நெல் நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது, நெல் அடிப்பது ஆகிய அனைத்து பணிகளையும் தற்போது எந்திரம் மூலம் விவசாயிகள் செய்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் பாரம்பரியமான முறையில் காளை மாடுகளை ஏரில் பூட்டி உழவு பணிகளை செய்து வருகின்றனர். அதில் ஒரு சில விவசாயிகள் இரும்பாலான எந்திரத்தை ஏரில் பொருத்திக்கொண்டு வயலை சமன் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினமும் விவசாயிகள் சேற்றில் இறங்கி வேலை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்