திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இலவச மனைப்பட்டா வழங்க கோரி நடந்தது

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-11-23 17:39 GMT

திட்டக்குடி, 

 தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொளார், செங்கமேடு, கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முன்னதாக சங்கத்தின் தலைவர் தயா பேரின்பம் தலைமையில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள்  வதிஷ்டபுரம்  பஸ் நிறுத்தத்தில் இருந்து  பாய், குடம், பாத்திரங்களுடன் ஊர்வலமாக  தாலுகா  அலுவலகம் நோக்கி வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பினர்.

 தகவல்  அறிந்த தாசில்தார் தமிழ்ச்செல்வி, சமூக நல திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இலவச வீட்டு மனை பட்டா வழங்க இடத்தை தேர்வு செய்தும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 இதை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். 
இதில், மாநில பொருளாளர் பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் முருகானந்தம் மற்றும் வீரராஜன், முருகேசன், சுரேஷ்குமார், கலியன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்