அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் கைது

பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல் பெண் கைது

Update: 2021-12-03 16:05 GMT
கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி மற்றும் சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாமனந்தல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் வைத்திருந்த 2 பைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அந்த பெண் பயணியிடம் விசாரணை செய்தபோது அவர் சங்கராபுரம் அருகே உள்ள கிடங்குடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துள்ளுகுட்டி மனைவி ராஜலட்சுமி(வயது 36) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஷாகுல்ஹமீது என்பவரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள 18 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்