கலெக்டர் காரை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் காரை மறித்து தம்பதி தீக்குளிக்க முயற்சித்தனர்.

Update: 2021-12-06 21:50 GMT
மதுரை, 
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். இந்த கூட்டம் முடிந்து கலெக்டர் காரில் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அவரது காரை வழிமறித்து ஒரு தம்பதி திடீரென்று தங்கள் மீது மண்எண்ணெய்யை ஊற்றினர். உடனே கலெக்டர் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து அந்த தம்பதியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். அதன்பின் அந்த தம்பதியிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் குருவிக்காரன் சாலையை சேர்ந்த அச்சப்பன் மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி என தெரிந்தது. அவர்கள் கலெக்டரிடம், மதுரையில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலின் கிளை சென்னையில் உள்ளது. அந்த கிளையில் என்னை தொழில் பங்குத்தாரராக இணைப்பதாக கூறி ரூ.24 லட்சம் பெற்று கொண்டனர். ஆனால் கொரோனாவிற்கு பிறகு ஓட்டல் திறக்கப்பட வில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்டு பார்த்தும் பதில் இல்லை. எனவே என்னை மோசடி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்