சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி

சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி.

Update: 2021-12-10 18:08 GMT
சென்னை,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் உள்ள புறநகர் ரெயில் நிலையத்தில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள், ரெயில்வே போலீசார் அஞ்சலி செலுத்தினர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிப்பட்ட பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஆனந்த், தெற்கு ரெயில்வே தலைமை பாதுகாப்புப்படை கமிஷனர் சந்தோஷ் சந்திரன், துணை தலைமை பாதுகாப்புப்படை கமிஷனர் லூயிஸ் அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும், ரெயில் பயணிகள் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்