சென்னிமலை அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

சென்னிமலை அருகே மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-12-29 14:28 GMT
சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சுனை பாறை என்ற இடத்தில் முகாசிபிடாரியூரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் மண் கொண்டு செல்வதாக சென்னிமலை நில வருவாய் அலுவலர் முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவகுமார், லீலாவதி, நிர்மலாதேவி ஆகியோருடன் அங்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 லாரிகளில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரிகள் பெருந்துறை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து நில வருவாய் அலுவலர் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர், லாரி மேலாளர் மற்றும் நில உரிமையாளர் ஆகியோர் மீது சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்