வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-05 18:13 GMT
கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கிளியாப்பட்டு மற்றும் வள்ளிவாகை ஊராட்சி, தெள்ளானந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கிளியாப்பட்டு ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை, வள்ளிவாகை ஊராட்சி தெள்ளானந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் வட்டார நாற்றாங்கால் அமைத்தல் பணியின் மூலம் ரூ.20¼ லட்சம் மதிப்பில் 27 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணி முடிந்ததையும், மரக்கன்று உற்பத்தி செய்தல் பணியின் மூலம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 500 மரகன்றுகள் நடும் பணி முடிந்து பராமரித்து வரும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி இயக்குனர் (தணிக்கை) கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, ப.சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் தமயந்திஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலா குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்