முறையான ஆவணங்கள் இல்லாத கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 2 லாரிகள் பறிமுதல்

முறையான ஆவணங்கள் இல்லாத கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன,.

Update: 2022-01-11 15:30 GMT
பவானி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேலு தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை பவானி மேட்டூர் சாலையில் திடீர் வாகன சோதனை ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட 2 லாரிகள் வந்தன. உடனே அந்த லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது அந்த லாரிகளில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சாம்பல் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்து.
பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட அந்த 2 லாரிகளும், தமிழகத்தில் ஓட்டுவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கியதுடன், நுழைவு வரியும் செலுத்தவில்லை,’ என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் புதுப்பிக்காத சரக்கு ஆட்டோ ஒன்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதேபோல் பவானி, அம்மாபேட்டை, குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளில் நடந்த வாகன சோதனையில், பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்