ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கண்டக்டர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி கண்டக்டர் பலி

Update: 2022-01-12 17:42 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பணி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் வேலூர்- வாணியம்பாடி சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரையும், மோட்டார் சைக்கிளில் வந்த நபரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ராமலிங்கம் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்