உதயகிரி கோட்டையில் கலெக்டர் ஆய்வு

புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரி கோட்டையில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-12 20:05 GMT
அழகியமண்டபம்,
புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரி கோட்டையில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
உதயகிரி கோட்டை
தக்கலை புலியூர்குறிச்சியில் உதயகிரி கோட்டை உள்ளது. இந்த கோட்டை வளாகத்தில் டச்சுப்படை தளபதி டிலெனாய்க்கு கல்லறை எழுப்பப்பட்டு அதில் தமிழ் மற்றும் இலத்தீன் மொழிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. 
இந்த கல்லறையில் டச்சு அரசு சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. டிலெனாய் கல்லறையின் அருகில், அவரது மனைவி மார்க்கரெட்டா டிலெனாய், மகன் ஜான் டிலெனாய் மற்றும் அவருடன் பணிபுரிந்த அடுத்த நிலை ராணுவ அதிகாரி பீட்டர் பிளோரிக் ஆகியோர் கல்லறைகளும் உள்ளன.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று உதயகிரி கோட்டைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள கல்லறைகளையும்  பார்வையிட்டார்.மேலும் உதயகிரி கோட்டையில் பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களை அமைத்து சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர் மேல்மங்கை, மாவட்ட வன அதிகாரி இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்