தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-16 08:29 GMT
குரோம்பேட்டை சாந்தி நகர், கட்டபொம்மன் தெரு, கிழக்கு தாம்பரம் ஐ.ஏ.எப். சாலை பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை அகழ்ந்து எடுத்துவிட்டு, சாலை மட்டம் உயராமலும், மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையிலும், மழை நீரால் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லாத வகையில் பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் சாலை பணிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இதைசெய்ய தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

அப்போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்