மயான கொட்டகை முன்பு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

அரிச்சந்திரபுரத்தில் மயான கொட்டகை முன்பு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

Update: 2022-01-19 15:50 GMT
கூத்தாநல்லூர்:
அரிச்சந்திரபுரத்தில் மயான கொட்டகை முன்பு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மயான கொட்டகை 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தில் வெண்ணாற்றின் கரையோரத்தையொட்டி மயான கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த மயான கொட்டகை அரிச்சந்திரபுரம் கிராமத்தில் யாராவது இறந்தால், அவர்களை நல்லடக்கம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அரிச்சந்திரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மயான கொட்டகை உள்ள இடத்தில் கடந்த சில மாதங்களாக அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது.  இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது சிரமம்  ஏற்படுகிறது. ேமலும் இறந்து போனவரை அடக்கம் செய்வதற்கு இறுதி சடங்கில் கலந்துகொள்பவர்களுக்கு இங்கு கொட்டப்படும் குப்பைகள் இடையூறாக உள்ளது.   
தொற்று நோய் பரவும் அபாயம்
தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால்  சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிச்சந்திரபுரம் மயான கொட்டகை முன்பு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்