பெண்கள் திடீர் சாலை மறியல்

ஆலங்குளம் அருகே பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-20 19:49 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நேற்று வழக்கம்போல் இந்த கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. அப்போது அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தனர். இதில் தங்களுக்கு வினியோகம் செய்யப்படும் அரிசி மட்டும் தரமற்றதாக உள்ளதாக கூறி கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் வந்து  பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் பொருட்கள் வருவாய் ஆய்வாளர் பேச்சி, புதுப்பட்டி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களிடம் தங்களுக்கு தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக முறையிட்டனர். இதுகுறித்து கேட்ட அதிகாரிகள் தரமான அரிசி வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியலை பெண்கள் கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்