93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சிவகாசி வட்டாரத்தில் 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2022-01-21 20:18 GMT
சிவகாசி, 
சிவகாசி வட்டாரத்தில் 93 சதவீத மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் இதுவரை 18 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி  90 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 50 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 3-ந்தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதவர்கள் என 93 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம்
தற்போது சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய தடுப்பூசி போடும் பணியினை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
சிவகாசி வட்டாரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 10 நாட்களில் 93 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் கொடுத்த ஒத்துழைப்பு தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது. அடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சிவகாசி பகுதியில் 50 சதவீதம் பேர் தான் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த இன்று 180 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக் கும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்