மகாவிகாஸ் அகாடி அரசை கலைக்க வேண்டும் கவர்னரிடம் பா.ஜனதா மனு

மகாவிகாஸ் அகாடி அரசை கலைக்க வேண்டும் என கவர்னரிடம் பா.ஜனதா மனு கொடுத்து உள்ளது.

Update: 2022-01-23 17:54 GMT
கோப்பு படம்
மும்பை, 
மகாவிகாஸ் அகாடி அரசை கலைக்க வேண்டும் என கவர்னரிடம் பா.ஜனதா மனு கொடுத்து உள்ளது.
எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் தள்ளுபடி
தானே மாவட்டத்தில் உள்ள ஒவலா மாஜிவாடா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவசேனாவை சேர்ந்த பிரதாப் சர்நாயக். தானேயில் இவருக்கு சொந்தமாக அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் தளங்கள் கட்டப்பட்டதற்காக அவருக்கு ரூ.4.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் பிரதாப் சர்நாயக்கிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்ய மாநில நகர்புற மேம்பாட்டு துறை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு நிதித்துறை எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எதிர்ப்பை மீறி சிவசேனா எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அரசை கலைக்க வேண்டும்
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் மாநில அரசை கலைக்க வேண்டும் என பா.ஜனதா, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிடம் மனு கொடுத்து உள்ளது. 
இது குறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாடி அரசு சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் தொடர்புடைய குடியிருப்பு திட்டத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம், வட்டியை தள்ளுபடி செய்து உள்ளது. 
இது பதவி பிராமணத்திற்கு எதிரானது. இந்த விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா, கோர்ட்டிலும் முறையிட உள்ளோம்" என்றார்.

மேலும் செய்திகள்