இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும்

மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட வசதியாக இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-24 16:24 GMT
திட்டச்சேரி:-

மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட வசதியாக இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வீட்டுமனை பட்டா

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மாதாகோவில் தெருவை சேர்ந்த வீடு இல்லாத 11 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். 
இதுகுறித்து கிராம கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்கி 3 மாதங்களான பின்னரும் இதுவரை மனையை அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அளவீடு செய்து...

மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது வரை வீடு கட்ட முடியவில்லை என வீட்டுமனை பட்டாக்களை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடு கட்ட வசதியாக பயனாளிகளுக்கு இடத்தை அளவீடு ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்