மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்த அஞ்சல் அலுவலகம்

மூவர்ண மின் விளக்குகளால் நாகை அஞ்சல் அலுவலகம் ஜொலித்தது.

Update: 2022-01-25 18:23 GMT
நாகப்பட்டினம்:
இந்தியாவில் உள்ள பழங்கால பாரம்பரிய அஞ்சலக கட்டிடங்கள்  அடையாளம் காணப்பட்டு குடியரசு தின விழாவையொட்டி மின்விளங்குளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 4 அஞ்சலக கட்டிடங்கள் பாரம்பரிய பழங்கால கட்டிடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நாகை அஞ்சலக கட்டிடமும் ஒன்று.  நாகையில் தற்போது அஞ்சல் அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம் கடந்த 1867-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 160 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. 
இதையடுத்து குடியரசு தின விழாவையொட்டி அஞ்சல் அலுவலகம் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. இதை இரவு நேரங்களில் பார்ப்போர் கண்களை கவர்ந்து வருகிறது. 

மேலும் செய்திகள்