600 மதுபாட்டில்கள் பறிமுதல்

முசிறி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் பிடிபட்டனர்.

Update: 2022-01-25 18:53 GMT
முசிறி,ஜன.26-
முசிறி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் பிடிபட்டனர்.
மதுபாட்டில்கள்
முசிறியை அடுத்த கண்ணனூர் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கண்ணனூர் சென்ற தனிப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கண்ணனூர் டாஸ்மாக் கடை அருகே குடோன் ஒன்றில் 600 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து போலீசார்அவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முசிறி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  துறையூர் மணிமாறன், திருத்தலையூர் வேலுச்சாமி, சவுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
3 பேர் கைது
 துவரங்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைப்பட்டியைச் சேர்ந்த செந்தில் (33), ஆண்டியபட்டியைச் சேர்ந்த மலையாண்டி (55), கரடிபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (30) கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க வாங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த 57 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  
லாட்டரி சீட்டு விற்பனை
திருச்சி  மணல்வாரிதுறை சாலை, காஜா பேட்டை பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 48), பொன்மலைப்பட்டி பிரான்சிஸ் நகரை சேர்ந்த சண்முகம் (56) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற தொகை ரூ.5 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்