கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரையில் நேற்று புதிதாக 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதுபோல் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-01-29 20:51 GMT
மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதுபோல் 2 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 24 ஆயிரத்து 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், நேற்று, புதிதாக 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 627 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் கொரோனாவால் இதுவரை 88 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 ஆயிரத்து 27 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, மதுரை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 478 ஆக உள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 250 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

2 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது மூதாட்டி, 73 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் 2 பேருக்கும் கொரோனா பாதிப்புடன் வேறு சில நோய் பாதிப்பு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,212 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்