மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-31 18:13 GMT
சிவகங்கை,

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் மகனுடன் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றினார்.
 இதை பார்த்த அங்கு காவலுக்கு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து அவர் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி வீசி எறிந்தனர். .அத்துடன் அங்கிருந்த தண்ணீரை கொண்டு அவர் உடலில் ஊற்றினார்கள். 

சொத்து பிரச்சினை

இதுபற்றிய தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் ஜெயராணி அங்கு வந்து அந்த பெண்ணை சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் கோகிலா (வயது 35) என்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.
 இவருடைய சகோதரர் காசிநாத துரை என்பவருக்கும் இவருக்கும் சொத்து பிரச்சினை உள்ளதாகவும் காசிநாத துரை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் போலீஸ்காரராக இருப்பதாகவும் அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------

Tags:    

மேலும் செய்திகள்