கரூர் மாநகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர்-நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

கரூர் மாநகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர்-நிலைக்குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.

Update: 2022-03-31 18:09 GMT
கரூர்
கரூர், 
மறைமுக தேர்தல்
கரூர் மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி  மாநகராட்சி கூட்ட அரங்கில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கரூர் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு 23-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி விருப்பமனு அளித்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் விருப்பமனு அளிக்கவில்லை. இதனால் நியமனக்குழு உறுப்பினராக வளர்மதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
நிலைக்குழு தலைவர்கள்
பின்னர் நிலைக்குழு தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கணக்குக்குழு தலைவராக 33-வது வார்டு கவுன்சிலர் பாலவித்யா, பொது சுகாதாரக்குழு தலைவராக 17-வது வார்டு கவுன்சிலர் சக்திவேல், கல்விக்குழு தலைவராக 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக 10-வது வார்டு கவுன்சிலர் ரஞ்சித்குமார், நகரமைப்புக்குழு தலைவராக 47-வது வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி, பணிகள் குழுத்தலைவராக 5-வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்