பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தாளியாம்பட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-06 18:43 GMT
குளித்தலை, 
குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தால் நடப்பாண்டு இக்கோவில் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. இதையொட்டி கடந்த வாரம் கம்பம் ஊன்றப்பட்டு திருவிழா தொடங்கியது. கடந்த 10-ந் தேதி குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்திக்கொண்டும் சென்றனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மேலும் அம்மனுக்கு மாவிளக்கு படைத்து கிடா வெட்டி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்