விநாயகர், முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கலசபாக்கம் அருகே விநாயகர், முத்தாலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-04-13 13:06 GMT
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே விநாயகர், முத்தாலம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கலசபாக்கத்தை அடுத்த கோவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர், முத்தாலம்மன் கோவிலில் உள்ளது. கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு யாக பூஜைகள் நடந்தன. 

பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை முழங்க பூர்ணாஹுதி செய்து யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

அந்த நேரத்தில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கோவில் மேலிருந்து பக்தர்களுக்கு புனிதநீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்