பருத்தி செடியில் நோய் தாக்குதல்; அதிகாரிகள் ஆய்வு

பருத்தி செடியில் நோய் தாக்குதல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-14 20:34 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி செடியில் நோய் தாக்குதல் குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.மீனாட்சிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூர் ஆகிய நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை உதவி இயக்குனர் உதயகுமார், பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர்  வீரபுத்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு), ராஜேந்திரன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை காப்பாற்றுவது பற்றி விளக்கம் அளித்தனர். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் தீபஞானசுந்தரி, உதவி வேளாண்மை அலுவலர்கள் முகமது பாதுஷா, கிரிஜா ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்