நெடுவாக்குளம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரம்

நெடுவாக்குளம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-04-23 18:38 GMT
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் நிலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டு இருந்தார். வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் கீழ்பாதி பகுதியில் உள்ள நெடுவாக்குளம் ஏரி 110 ஏக்கர் கொண்டது. இந்த ஏரியில் சுமார் 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் தென்னை, நெல், எள், தேக்கு, தைலமரம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணிகள் வருவாய்த்துறை மூலமாக நடந்தது.
இந்தநிலையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, துணை தாசில்தார் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர் ரவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோவேந்தன், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மற்றும் வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. இதையடுத்து, பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்