அகழாய்வில் கிடைத்த எலும்புகள்

சிவகாசி அருகே அகழாய்வில் எலும்புகள் கிடைத்தன.

Update: 2022-04-25 19:55 GMT
தாயில்பட்டி, 
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடைெபற்று வருகிறது. அப்போது பாண்டி விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான சில்லுவட்டுகள், ஆட்டக்காய்கள், எலும்புகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் ஆகியவை  கிடைத்தன. இதுகுறித்து அகழாய்வு பணி இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் கூறியதாவது:-  அகழாய்வு பணியின் போது நேற்று ஏராளமான எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன. அது எந்த விலங்கினத்தின் எலும்புகள் என்பதை கண்டறிய முடியவில்லை. நாளை 4-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடங்கும். இதில் கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்