நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட ஊழியர் பணி நீக்கம் விழுப்புரம் கலெக்டர் நடவடிக்கை

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட ஊழியர் பணி நீக்கம் விழுப்புரம் கலெக்டர் நடவடிக்கை

Update: 2022-04-28 17:31 GMT
திண்டிவனம்

மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தியில் கடந்த மாதம் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியராக பணிபுரிந்து வந்த  துரைமுருகன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.1-ம் தர வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாது எனக் கூறினார். 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மேல்மலையனூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வளத்தி போலீசார் பணம் பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து துறை ரீதியாக நடைபெற்ற விசாரணையில் துரைமுருகன் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டது உண்மை என்று தெரியவந்ததால் அவரை பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்