விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் இயற்கை உரம் உருவாக்கும் மையம் மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் இயற்கை உரம் உருவாக்கும் மையத்தை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-30 17:14 GMT

விழுப்புரம், 

தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் உருவாக்கும் மையம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.பூர்ணிமா தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் ரமணன், நீதிமன்ற பணியாளர்களுக்கு உரம் தயாரிப்பது குறித்து செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நீதிபதிகள் சாந்தி, சந்திரன், விஜயகுமார், சுந்தரபாண்டியன், பிரபாதாமஸ், திருமணி, அருண்குமார், எஸ்.பூர்ணிமா, வினோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்