பள்ளி நுழைவுவாயில் வழியாக சென்று வர சிரமப்படும் மாணவர்கள்

பள்ளி நுழைவுவாயில் வழியாக சென்று வர மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

Update: 2022-05-07 19:11 GMT
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளி 2 ஆசிரியர்களுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புத்தூர் முனியங்குறிச்சி வழியாக பெரியதிருக்கோணம் வரை சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியும் மற்றும் சாலையை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலையோரத்தில் உள்ள பள்ளியின் நுழைவு வாயில் சற்று பள்ளமாக உள்ளது. சாலையும், சாக்கடை கால்வாயும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நுைழவு வாயில் வழியாக பள்ளிக்குள் செல்வதற்கு மிகவும் தடுமாற்றமடைந்து வருகின்றனர். சில சமயங்களில் மாணவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள்.
இதனால் மாணவர்கள், மற்ற மாணவர்களின் உதவியுடனேயே நுழைவு வாயிலை கடந்து பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி நுழைவு வாயில் பகுதியில் சாய்தளம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்