ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் கூரை வீடுகள், வாழை மரங்கள் சேதம்

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் மழைகாரணமாக கூரை வீடுகள், வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

Update: 2022-05-10 18:02 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த கடையின் மேற்கூரைகள், பெயர்ப்பலகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது. மேலும் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

ஏலகிரிமலை அத்தனாவூர், தாயலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்ததில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் சென்று மின் கம்பங்கள் சரி செய்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மின் தடை ஏற்பட்டு, நேற்று காலை 10 மணிக்குதான் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. கூரை வீட்டின் ஓலைகள் காற்றில் பறந்தன.
விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்