ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பான்கங்கா குளத்தில் மீன்கள் செத்தன- மாநகராட்சி அறிக்கை

மும்பை வால்கேஷ்பர் பகுதியில் பான்கங்கா குளத்தில் மீன்கள் செத்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என மாநகராட்சி அறிக்கை சமர்பித்துள்ளது.

Update: 2022-05-11 14:10 GMT
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் செத்தன
மும்பை, 
  மும்பை வால்கேஷ்பர் பகுதியில் பான்கங்கா குளம் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தில் பல்வேறு மத சடங்குகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த மாதம் இந்த குளத்தில் அதிக அளவிலான மீன்கள் இறந்து கிடந்தன. இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 
  குளத்தில் மீன் கூட்டம் அதிகரித்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. எனவே மீன்களின் ஒரு பகுதியை வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 
  இதற்கிடையே மீன்கள் செத்ததற்கான காரணத்தை கண்டறிய இந்த குளத்தின் தண்ணீர் ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்தது தெரியவந்துள்ளது.
  இதில் குளத்தில் கெமிக்கல் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததால், தண்ணீரின் நிறம் மாறி, பாசிகள் உருவாகி ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் மீன்கள் இறந்ததாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
-----

மேலும் செய்திகள்