பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-05-11 18:45 GMT
நன்னிலம்:-

துணிப்பை பயன்பாட்டை அதிகரிப்பது, பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, பயன்பாட்டை முழுமையாக தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.  பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை அனைத்து வர்த்தக சங்க பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கருணாநிதி பிறந்தநாள் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆசைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்