பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-05-11 17:23 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பொருளாளர் குமரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் சிங்காரம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

 ஆர்ப்பாட்டமானது,  பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், 3 சதவீத அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜனவரி முதல் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதில் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, முன்னாள் மாநில பிரசார செயலாளர் சிவகுரு, மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் மணிகண்டன், சாலை பணியாளர் சங்க பொருளாளர் கண்ணன், 

ஆதிதிராவிடர் நலத்துறை மாநில துணைத்தலைவர் நடராஜன், அரசு பணியாளர் சங்க இணை செயலாளர் தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பன்நோக்கு மருத்துவ பணியாளர் சங்க மாநில பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்