100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் சுருட்டிய கல்யாண மன்னன் கைது...!

டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் சுருட்டிய கல்யான மன்னனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-14 07:09 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம்  செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாயை சுருட்டிய  35 வயதுடைய நபரை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். 

எய்ம்ஸ்சில்  பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் கைது செய்தனர்.

பெண் டாக்டர் அளித்த புகாரில்,  கானை ஒரு   ஆன் லைனில் திருமண பதிவு மையத்தில்  சந்தித்ததாகவும், அங்கு அவர் தன்னை ஒரு இளங்கலை மற்றும் ஒரு அனாதை என்றும் அறிமுகப்படுத்தினார். தான் இன்ஜினியரிங், எம்பிஏ படித்திருப்பதாகவும், சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகவும் முதலில் பெண் டாக்டரை  நம்ப வைத்தார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறி, கான் டாக்டரிடம்  ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

விசாரணையில், கான் மேட்ரிமோனியல் போர்ட்டலில் பல போலி ஐடிகளை உருவாக்கி அதன் மூலம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களுடன் நட்பு வைத்திருப்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். 

அவர் கொல்கத்தாவில் இருந்து கண்காணிக்கப்பட்டு இறுதியாக வியாழக்கிழமை பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார், என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

கான் பெண்களைக் கவர விவிஐபி பதிவு எண்ணைக் கொண்ட உயர்தர காரைக் காட்டி, அது தனக்குச் சொந்தமானது என்று கூறிக் கொண்டார். உண்மையில், அந்த கார் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர்.  

அவர் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பணக்காரர் என்று காட்டிக் கொள்வாராம். அவர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக அவரிடம் சிக்கிய பெண்களிடம்  ஆசை வார்த்தை கூறுவாராம் என  போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

உண்மையில், கான் திருமணமானவர், அவருக்கு மூன்று வயது மகள், தந்தை மற்றும் ஒரு சகோதரி உள்ளனர் என்றும்  இருப்பினும், தனது பெற்றோர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவர் பெண்களிடம்  நாடகமாடியதாக ஆடியாதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

அவரிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி, நான்கு சிம் கார்டுகள், கார், ஒன்பது ஏடிஎம் கார்டுகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன் லைனில்  திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்த அந்த மோசடிப் பேர்வழி, ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

போலீசார் விசாரித்த போது இதே போல்100க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஃபர்ஹான் ஒப்புக் கொண்டார்.

மேலும் செய்திகள்