அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் கிடைக்காததற்கு காரணம்; மு.க. ஸ்டாலின்

அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது குடிநீர், சாலை வசதிகள் போன்றவை கிடைக்காததற்கு காரணம் என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2019-05-04 15:19 GMT
மதுரை,

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரசாரத்தில் பேசும்பொழுது, உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் மாறி, மாறி கூறி வருவது கண்டனத்திற்குரியது.

அதனால் மாநில தேர்தல் ஆணையர் தானாக முன்வந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார்.

இதுவரை நான் 12 ஆயிரத்து 500 கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தியுள்ளேன்.  மக்களின் குறைகளை கேட்டுள்ளேன்.  ஆனால், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை மற்றும் பேருந்து வசதிகள், சுகாதார வசதிகள் போன்றவை மக்களுக்கு கிடைக்கவில்லை.  இதற்கு அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்திடாமல் இருப்பது காரணம் என கூறியுள்ளார்.

வருகிற மே 23ந்தேதி மத்தியிலும் மற்றும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.  அதன்பின்னர் இந்த குறைகள் தீர்க்கப்படும்.  தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என கூறினார்.

மேலும் செய்திகள்