சிக்கமகளூருவில் நடக்கும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு - மாவட்ட காங்கிரஸ் தலைவர் தகவல்

ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 16-ந்தேதி சிக்கமகளூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் நடக்க உள்ளது.

Update: 2022-10-08 00:03 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரை தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 16-ந்தேதி சிக்கமகளூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் நடக்க உள்ளது.

இதில், சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து சிக்கமகளூரு, மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள். 17-ந்தேதி சித்ரதுர்காவில் பாதயாத்திரை நடக்க உள்ளது. இதிலும் சிக்கமகளூருவில் இருந்து 10 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையில் பங்கேற்க கட்சி தொண்டா்கள் அனைவரும் ஆா்வமாக உள்ளனர். ராகுல்காந்தியின் வருகை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது சிக்கமகளூருவில் கட்சியை வளர்க்க உதவியாக இருக்கும். சிக்கமகளூருவுக்கு வரும் ராகுல்காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்