ஜல்லிக்கட்டுக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ‘ஈஷா அறக்கட்டளை’ நிறுவனரும், ஆன்மிகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Update: 2017-01-19 21:12 GMT
ஜெய்ப்பூர்,

ஜல்லிக்கட்டுக்கு ‘ஈஷா அறக்கட்டளை’ நிறுவனரும், ஆன்மிகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காளை மாடுகள், விவசாயிகளின் குடும்பத்தில் ஒரு அங்கம். அவர்களுடனே அவை வாழ்கின்றன. மாடுகளை கவுரவிக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது, அவற்றை வதைப்பதற்கு அல்ல. ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால், மாடுகளை இறைச்சிக்கூடங்களுக்குத்தான் அனுப்ப வேண்டி இருக்கும்.

ஜல்லிக்கட்டு, ஒரு விளையாட்டு. அது, நூற்றாண்டுகள் பழமையுடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் இதை உணராமல், தவறான முன்உதாரணங்களை சுட்டிக்காட்டி வழக்கு போட்டுள்ளனர். அப்படிப் பார்த்தால், கிரிக்கெட் விளையாடுவது கூட ஆட்டக்காரர்களுக்கு ஆபத்தானதுதான்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்