பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கபட்டு உள்ளது.

Update: 2017-02-22 11:23 GMT

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று சசிகலாவை அவரது அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இளவரசியின் மகன் விவேக் மற்றும் மருமகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

நேற்று சசிகலாவை சந்திக்க அமைச் சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் பெங்களூரு வந்தனர்.

அவர்கள் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டு சிறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர்கள் சசிகலாவை சந்தித்து பேச அனுமதி கொடுக்க முடியாது என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறி விட்டனர்.

அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் சசிகலாவை சந்தித்து பேச விரும்பினால் நேராக இங்கு வரக்கூடாது. கர்நாடகா மாநில சிறைத் துறை டி.ஐ.ஜி. சத்தியநாராய ணாவிடம் உரிய அனுமதி பெற்று வரவேண்டும். சிறை அதிகாரிகள் தரப்பில் கூறபட்டு உள்ளது.

பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளின் கெடுபிடி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை டி.ஐ.ஜியை சந்தித்து அனுமதி பெறுவதும் எளிதானதாக இல்லை என்று தெரிகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேச விரும்பினார். இதற்காக அவர் சார்பில் கர்நாடகா சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மனுவை ஏற்று சிறைத்துறை இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனி சாமியின் பெங்களூரு பய ணத்தில் தாமதம் ஏற்பட்டுள் ளது.

அமைச்சர்களே சசிகலாவை சந்திக்க முடியாமல் திணறுவதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேச முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே சிறை பகுதி யில் தேவை இல்லாமல் வந்து திரளக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர். எனவே சசிகலாவை அ.தி.மு.க. தலைவர்கள் அடிக்கடி சந்தித்து பேச இயலாது என்று தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்