திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் சுவையான அன்னபிரசாதங்கள்

பக்தர்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளுக்கு திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னபிரசாத அறக்கட்டளைக்கு தாராளமாக நிதி உதவி செய்து வருகிறார்கள்.

Update: 2017-02-25 22:00 GMT

திருப்பதி,

பக்தர்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளுக்கு திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னபிரசாத அறக்கட்டளைக்கு தாராளமாக நிதி உதவி செய்து வருகிறார்கள். இந்த நிதியின் மூலம் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி.சாம்பவசிவ ராவ் கூறும்போது, ‘‘இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் அன்னபிரசாத அறக்கட்டளையின் நிதி ரூ.800 கோடியை எட்டும். எனவே அன்னபிரசாத அதிகாரிகள் மேலும் சுவையான உணவுகள், சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க ஒரு அதிரடி திட்டத்தை தயாரிக்க வேண்டும். அறக்கட்டளை டீசல் பயன்பாட்டை குறைத்து சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றி ஆய்வு நடத்துவதற்காக விரைவில் ஒரு கமிட்டி அமைக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்