அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசர அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது.

Update: 2017-03-23 09:42 GMT
புதுடெல்லி,

லண்டன் வழியாக அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு செல்லும் ஏர்இந்தியாவின் ஏஐ 171 விமானம் நேற்று 230 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் மூக்குப் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் முன்பகுதியானது சேதம் அடைந்தது, ரேடார் சேதம் அடைந்தது. இதனையடுத்து விமானம் லண்டன் ஹூத்ரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

அமெரிக்கா செல்லவிருந்த 50 பயணிகள் வேறு விமானத்தின் மூலம் அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தின் நெவார்க் மற்றும் லண்டன் இடையிலான சேவையானது ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரிசெய்யும் பணியானது நடைபெற்று வருகிறது, விமானம் லண்டன் - அகமதாபாத் சேவைக்கு தயார் ஆகிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்